Header

Sri Lanka Army

Defender of the Nation

16th October 2022 09:49:49 Hours

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் போர் கல்லூரிக்கு விஜயம்

கொழும்பு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான பிரித்தானிய இராணுவத்தின் கேணல் பால் கிளேட்டன் எம்பிஈ அவர்கள் நேற்று வியாழக்கிழமை (13) புத்தல இராணுவப் போர்க் கல்லூரிக்கு விஜயம் செய்தார்.

கேணல் பால் கிளேட்டனை போர் கல்லூரியின் பிரதி தளபதியும் தலைமைப் பயிற்றுவிப்பாளரும் அன்புடன் வரவேற்றனர். பின்னர், பாதுகாப்பு ஆலோசகர், இராணுவப் போர் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் வைஏபிஎம். யஹம்பத் அவர்களை கல்லூரியின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இராணுவ போர் கல்லூரியின் தளபதி அலுவலகத்தில் சந்தித்தனையடுத்து அங்கு கேணல் கிளேட்டன் அவர்களுக்கு வருகையைக் குறிக்கும் வகையில் தளபதியினால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

அதன்பிறகு, கேணல் கிளேட்டன் இராணுவப் போர்க் கல்லூரியின் பயிற்சி விடயங்களுடன் தொடர்புடைய பாடத்திட்டம் மற்றும் செயல்பாடுகள் பற்றிய விளக்கத்தைப் பெற்றார். அதனை தொடர்ந்து பயிற்சி தொடர்பான உதவிகளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடினர்.

அதனை தொடர்ந்து அவர் பிரதான அரங்கம், நூலகம், பாதுகாப்பு கற்றல் கிளை மற்றும் மாதிரி அறையையும் பார்வையிட்டார். அதன்பிறகு, அவர் புறப்படுவதற்கு முன்பு போர் கல்லூரியில் உள்ள அதிகாரிகளின் உணவகத்தில் மற்ற அதிகாரிகளுடன் சிறு விருந்திலும் கலந்துக் கொண்டார்.