Header

Sri Lanka Army

Defender of the Nation

16th October 2022 09:48:05 Hours

நூற்றுக்கணக்கான படையினர் மேல் மாகாண டெங்கு ஒழிப்புத் திட்டத்தில்

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 மற்றும் 61 வது காலாட்படை படையணிகளின் கீழ் சேவையாற்றும் படையினர் அதிக மழைப்பொழிவுடன் அதிகரித்து வரும் டெங்கு அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கையுடன் மேல் மாகாணத்தில் உள்ள ஏழு மாவட்டங்களின் 20 பிரதேச சுகாதார பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு செயற்த்திட்டங்களை 2022 ஒக்டோபர் 12 தொடக்கம் 14 வரை முன்னெடுத்தனர்.

அரசாங்கத்தின் தேசிய டெங்கு தொற்றுநோய் தடுப்பு பிரச்சார அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், மத ஸ்தலங்கள், பாடசாலைகள் மற்றும் பிற பொது இடங்களின் நீர் சேமிப்பு தொட்டிகள், பூச்சட்டிகள் மற்றும் குவளைகள், தோட்ட நீரூற்றுகள், குளிர்சாதன பெட்டி தட்டுகள், தண்ணீர் வழங்கும் தட்டுகள், உடைந்த தொட்டிகள், தூக்கி எறியப்பட்ட போத்தல்கள், டின்கள், கைவிடப்பட்ட டயர்கள், தேங்காய் சிரட்டைகள் மற்றும் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய சாத்தியமான இடங்கள் குறித்து அவதானம் செலுத்தினர்.

மேலும், வேகமாக பரவி வரும் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி தனிநபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நுளம்புகடியை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

14 மற்றும் 61 வது படைப்பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 200 இராணுவ வீரர்கள், பொலிஸ் அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள் மற்றும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றினர்.