Header

Sri Lanka Army

Defender of the Nation

16th October 2022 09:45:47 Hours

இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் ‘இராணுவ இலக்கியம்’ தொடர்பில் ரணவிருவா பிரதம ஆசிரியர் விரிவுரை

இலங்கை இராணுவத் தொண்டர் படை தலைமையகமானது தமது பயிற்சி தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (12) 'இராணுவ இலக்கியம்' என்ற தலைப்பில் விரிவுரை ஆற்றுவதற்காக இராணுவ உளவியல் செயற்பாட்டு பணியகத்தின் 'ரணவிருவா' சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் லெப்டினன் கேணல் ஈ.ஏ.ஏ.சுஜித் சமிந்த அவர்களை இலங்கை இராணுவத் தொண்டர் படை தலைமையகத்திற்கு அழைத்தது.

இலங்கை இராணுவத் தொண்டர் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவத் தொண்டர் படை தலைமையக பிரதி தளபதி மேஜர் ஜெனரல் துசித சில்வா அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்ச்சி ஒருங்கினைக்கப்படடது.

போர்க்கள நினைவுகள் வேகமாக மங்கி விலைமதிப்பற்ற தருணங்களை மறந்த போதிலும், போர்களின் போது தாய்நாட்டின் உண்மையான போர்வீரர்களின் ஈடு இணையற்ற மற்றும் எண்ணற்ற தியாகங்களை விரிவுரையாளர் நினைவுபடுத்தினார். அவர் இலங்கை இராணுவத்தில் இராணுவ இலக்கியத்திற்கு இலங்கைப் போரை அடிப்படையாகக் கொண்ட அற்புதமான படைப்புகளைத் தொகுத்த ஒரு எழுத்தாளர் ஆவார்.

அமர்வின் போது அவர் சமீபத்தில் எழுதிய இரண்டு புதிய படைப்புக்கள் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையக தளபதி, பிரதி தளபதி, பயிற்சி பரிசோதகர் மற்றும் கேணல் பயிற்சி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையக தளபதி முப்பது ஆண்டுகளுக்கும் மேலான போரின் சொல்லப்படாத அத்தியாயங்களை எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக எடுத்துரைமைக்கும் அவரது முயற்சியைப் பாராட்டினார். 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அது உச்சக்கட்டத்தை எட்டியபோது, போரின் போது உண்மையான வீரர்களின் உண்மையான துணிச்சலை அவர் நினைவூட்டினார்.

இந்த விரிவுரையில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் திரளாக கலந்து கொண்டனர்.

அதேபோன்று மேஜர் ஜெனரல் கல்ப சஞ்சீவ அவர்களின் அழைப்பின் பேரில் குண்டசாலை 11 வது படைப்பிரிவு தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (14) இதே விரிவுரை நிகழ்த்தப்பட்டது.

அதிகாரிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் விரிவுரையில் பங்குபற்றினர்.