Header

Sri Lanka Army

Defender of the Nation

13th October 2022 19:06:57 Hours

24 வது படைப்பிரிவின் புதிய தளபதி கள விஜயம்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 24 வது படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, தனது முதலாவது கள விஜயத்தை 242 வது காலாட் படை பிரிகேட் தலைமையகத்தின் 23 வது சிங்க படையணி மற்றும் 8 வது தேசிய பாதுகாவலர் படையணி என்பவற்றிக்கு வெள்ளிக்கிழமை (07) மற்றும் சனிக்கிழமை (08) மேற்கொண்டார்.

24 வது படைப்பிரிவின் தளபதி முதலில் 242 வது பிரிகேட் தலைமையகத்திற்கு சென்றபோது அங்கு சம்பிரதாயங்களில் கலந்துகொண்டதுடன் வருகை தந்த படைப்பிரிவு தளபதியை 242 வது பிரிகேட் தளபதி கேணல் அனுராதா சோலங்கராச்சி மற்றும் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி ஆகியோர் வரவேற்றனர்.

அதன்படி அனைத்து நிலையினருடன் தேநீர் விருந்துபசாரத்தில் பங்குபற்றியதுடன் மரக்கன்று நடுதல் மற்றும் படையினருடன் உரையாடல் என்பவற்றினை மேற்கொண்டதுடன் தொடர்ந்து படைப்பிரிவு தளபதிகள் முக்கியமான இடங்களின் செயல்பாடு பாதுகாப்பு ஏற்பாடுகள், வீரர்களுக்கான உணவு மற்றும் சமையல் வசதிகள் மற்றும் படையினரின் நலன்புரி வசதிகள் போன்றவை குறித்து விளக்கமளித்தனர். 24 வது படைப்பிரிவின் தளபதி 242 வது பிரிகேட் தலைமையகத்தின் கட்டளையின் கீழள்ள படையினரிடம் உரையாற்றிய போது அனைத்து மட்டங்களிலும் ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதன் மூலம் தொழில்முறை பயிற்சி மற்றும் நல்ல வேலையைத் தொடர்வதை வலியுறுத்தினார்.

மேலும் 24 வது படைப்பிரிவின் தளபதி சனிக்கிழமை (8) 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சென்று அங்கு கள நிலவரங்களை அறிந்துகொண்டார். அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அவரைச் சந்தித்து, இந்தக் களப்பயணத்தின் போது படையினரின் நிர்வாக அம்சங்கள், செயல்பாட்டுத் தேவைகள், நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் தேவைகள் பற்றிய விடயங்களை பற்றி தளபதிக்கு விளக்கமளித்தனர். மேலும், 242 வது பிரிகேட் தளபதியும் இந்த விஜயங்களில் கலந்துகொண்டார்.