Header

Sri Lanka Army

Defender of the Nation

14th October 2022 13:20:08 Hours

பொறியியல் படைப்பிரிவின் புதிய தளபதி பதவியேற்பு

மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்கள் புதன்கிழமை (12) மத்தேகொடவில் அமைந்துள்ள பொறியியல் படைப்பிரிவு தலைமையகமான சப்பர்ஸ் இல்லத்தில் மத அனுஸ்டானங்கள், சடங்குகள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் பொறியியல் படைப்பிரிவின் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிதாக பதவியேற்க வருகை தந்த இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவு தளபதியினை பொறியியல் படைப்பிரிவின் கேணல் நிர்வாகம் மற்றும் விடுதியினால் நுழைவாயிலில் வரவேற்கப்பட்டார். அதன்பின் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து அவர் இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டார். புதிய தளபதி பொறியியல் படைப்பிரிவு கேணல் பொதுபணியினால் அணிவகுப்பு மரியாதை மேடைக்கு அழைத்து செல்லப்பட்டது.

மகா சங்க உறுப்பினர்களின் 'செத்பிரித்' பாராயணத்திற்கு மத்தியில் மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்கள், உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு, தனது பதவியை ஏற்றுக்கொண்டதை அடையாளப்படுத்தினார். அதைத் தொடர்ந்து புதிய தளபதி குழு புகைப்படம் எடுத்தல், வளாகத்தில் மரக்கன்று நாட்டல் என்பவற்றில் கலந்துக் கொண்டார்.

பின்னர், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றுகையில் வரும் நாட்களில் தனது பணி மற்றும் கடமைகளை எடுத்துரைத்தார். மேலும் பொறியியல் படைப்பிரிவின் வினைத்திறனுக்காக அயராது உழைத்த தனது முன்னோடிகளுக்கு அவர் தனது நன்றியினை தெரிவித்தார்.

அன்றைய தின நிகழ்வுகள் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சி்ப்பாய்களின் தேநீர் விருந்துபசாரம் மற்றும் உரையாடல் அமர்வுடன் நிறைவு பெற்றன.

பிரிகேட் தளபதிகள், நிலைய தளபதி, இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலையின் தளபதி, கட்டளை அதிகாரிகள், படைப்பிரிவு பணியாளர்கள், மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.