12th October 2022 14:58:59 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் அம்பாந்தோட்டை நகரவெவவில் அமைந்துள்ள 12 வது படைப்பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் மிஹிந்து பெரேரா அவர்கள் சனிக்கிழமை (8) பதவியேற்றார்.
படைப்பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய தளபதியை கேணல் பொதுப்பணி கேணல் பிரசாத் ஜெயசிங்கவுடன் இணைந்து சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றதுடன் நுழைவாயிலில் படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 20 வது இலங்கை சிங்க படையணி படையினரால் இராணுவ சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மரக்கன்று நடுதல், குழு புகைப்படம் எடுத்தல் மற்றும் படையினருக்கான உரை என்பவற்றுடன் அன்றைய நிகழ்வுகள் முடிவுற்றன.
இந் நிகழ்வில் 121 மற்றும் 122 வது பிரிகேட் தளபதிகள், பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் 12 வது படைப்பிரிவின் சிப்பாய்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்கள் இப்போது பொறியியலாளர் படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.