Header

Sri Lanka Army

Defender of the Nation

14th October 2022 13:49:36 Hours

இராணுவ தலைமையகம் அருகே நடமாடும் காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை நிலையம்

படையினரின் பொதுவான பொருளாதார நெருக்கடிகளை குறைக்கும் வகையில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அறிவுத்தலின் பேரில் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு படையணி மற்றும் இலங்கை இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடைகள் பணிப்பகம் இணைந்து இராணுவத்தினரால் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள் மற்றும் பால் பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யும் நடமாடும் விற்பனை நிலையம்மொன்றை இன்று (11) பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

73 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந் நிலையமானது பத்தரமுல்ல பெலவத்தை இராணுவத் தலைமையக வாகன தரிப்பிடத்திற்கு அருகில் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்ந்தும் திறந்திருக்கும்.

இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபிஎஸ்எம் அபேசேகர ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சில வகையான மரக்கறிகள் மற்றும் வேறு தயாரிப்புக்களை அடையாளப்பூர்வமாக கொள்வனவு செய்து திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிஜே கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு, இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் டபிள்யூபிஎஸ்எம் அபேசேகர ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஏகே.ராஜபக்ஷ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இத் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.