11th October 2022 13:21:08 Hours
கொக்காவிலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 9 இலங்கை பொறியியலாளர்கள் படையணி முகாமின் 'தனும்பியச' நூலகத்திற்கு அண்மையில் தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைச் சபையிடமிருந்து புத்தகங்கள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றன.
9 வது இலங்கை பொறியியலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவை சபையின் திரு கலன சந்திமால் வகிஷ்ட அவர்கள் கிளிநொச்சியில் அமைந்துள்ள 9 வது இலங்கை பொறியியலாளர் படையணி முகாம் 'தனும்பியச' நூலகத்திற்கான இந்த நன்கொடையை ஏற்பாடு செய்தார்.
வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும் தொழிநுட்ப துறையின் பக்கத்தில் இருந்து திசைதிருப்பவும் இந்த திட்டம் உதவுவதை எண்ணி நன்கொடையாளர் இந் நிகழ்விற்கு பாராட்டுதெரிவித்தார். 9 வது இலங்கை பொறியியலாளர் படையணியின் கட்டளை அதிகாரி நன்கொடை புத்தகங்களை பெற்றுக்கொண்டதுடன் இத் திட்டத்திற்கு நன்கொடையாளருக்கு நன்றி தெரிவித்தார்.