09th October 2022 18:52:32 Hours
இலங்கைப் பொறியியலாளர் படையணிகளுக்கிடையிலான அணிவகுப்பு சாம்பியன்ஷிப் - 2022 போட்டிகள் 2022 செப்டம்பர் 7 தொடக்கம் 9 வரை பனாகொட இலங்கைப் பொறியியலாளர் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
பொறியியலாளர் படையணியின் 13 அணிநடை அணிகள் போட்டியில் கலந்துகொண்டனர். இலங்கை பொறியியலாளர் படையணியின் படைத் தளபதியும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள், ஒக்டோபர் 4ஆம் திகதி பனாகொட இலங்கை பொறியியலாளர் தலைமையகத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
5 வது கள பொறியியலாளர் அணிவகுப்பு அணி முதலாம் இடத்தையும், 16 வது வேலைத்தள பொறியியலாளர்கள் மற்றும் 14 வது சிபிஆர் (இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு) படையணி முறையே 2 ஆம் மற்றும் 3 ஆம் இடத்தையும் கைப்பற்றினர்.
16 வது வேலைத்தள பொறியியலாளர்கள் படையணியின் அணித் தலைவர் கெப்டன் டபிள்யுஏஆர்ஏ விக்கிரமசிங்க சிறந்த கட்டளையாளருக்கான் விருதையும் , 9 வது களப் பொறியியலாளர் படையணியின் பணிநிலை சார்ஜன் ஜேஎம் சுமணதாச சிறந்த அணிநடை பயிற்றுவிப்பாளருக்கான விருதையும் பெற்றுக் கொண்டனர்.
5 வது களப் பொறியியலாளர் படையணியின் கட்டளை அதிகாரிக்கு அவர்களின் சிறந்த செயற்திறனைப் பாராட்டி படைத் தளபதி அவர்களினால் படையணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டியின் சம்பியன்ஷிப் கொடியை வழங்கினார்.
ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், படையணி சார்ஜன் மேஜர்கள் மற்றும் பொறியியலாளர் சிப்பாய்கள் கலந்துக்கொண்டனர்.