06th October 2022 12:00:53 Hours
இராணுவத்தினரின் வழிகாட்டுதலில் இயற்கை விவசாயத்தின் மூலம் அநுராதபுர ஷாவஸ்திபுர விவசாயிகள் சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கை அறுவடையை செவ்வாய்க்கிழமை (20) மேற்கொண்டனர்.
வடமத்திய முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த வீரசிங்க அவர்கள், மே 25 அன்று ஷாவஸ்திபுர விவசாயிகளின் ஒத்துழைப்புடன் உரங்கள் பற்றாக்குறையால் கைவிடப்பட்ட அந்த நிலங்களில் மீள்பயிரிடுவதற்கு அவர்களை ஊக்குவித்தார். அரச விவசாய அதிகாரிகளின் ஆதரவையும் நிபுணத்துவத்தையும் பயன்படுத்திக் கொண்ட சிரேஷ்ட அதிகாரி, இயற்கை விவசாயம் பற்றிய அறிவை வழங்கினர்.
சிறப்பான அறுவடை பெறுவதற்காக விவசாயிகள் பயிர் செய்கைக்கு முன்வந்ததால், இராணுவம் வழங்கிய அனைத்து ஆதரவு மற்றும் வழிகாட்டுதலில் பலன் பெற்றனர்.
மேஜர் ஜெனரல் பிரியந்த வீரசிங்க அவர்களுக்கு அறுவடை விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதுடன், வடமத்திய முன்னரங்கு பராமரிப்பு பிரதேச அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.