04th October 2022 13:30:16 Hours
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (1) சிறுவர் மற்றும் அதன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவத்துவம் அளிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் இராணுவத்தினர் பல வழிகளில் தங்களின் பங்களிப்பை வழங்கினர்.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 142 வது பிரிகேட் தலைமையகம், 15 வது ட்ரோன் இலங்கை பீரங்கி படையணி, 7 வது கெமுனு ஹேவா மற்றும் 14 வது விஜயபாகு காலாட்படையணிகளின் ஏற்பாட்டில் 2022 ஒக்டோபர் 01 ஆம் திகதி மாதிவெல 'சுரச' விசேட கல்விப் பாடசாலை மற்றும் ஆண்கள் விடுதியில் உள்ள சிறுவர்களுக்கான மகிழ்விக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இவ் விசேட ஏற்பாட்டு நிகழ்வில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல மற்றும் அவரது துணைவியார் திருமதி ஹிமாலி புஸ்ஸல்ல ஆகியோர் கலந்துகொண்டனர். 14 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 142 வது பிரிகேட் தளபதி ஆகியோர் சிறுவர்களுக்கான நிகழ்வை ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். இதில் சிறுவர்களை மகிழ்விக்கும் முகமாக பல இசை, ஓவியம் மற்றும் தேநீர் வழங்குதல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் விசேட தேவையுடைய சில சிறுவர்களும் பங்கேற்றதுடன் அனைத்து சிறுவர்களுக்கும் சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் பாடல் சுற்றுகள், இசை நாற்காலிகள், விளையாட்டுகள், நடன நிகழ்வுகள் மற்றும் பல வேடிக்கையான நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. அத்துடன் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்லா அவர்கள் அந்த இடத்திற்கு தனது விஜயத்தினை மேற் கொண்டதுடன், முழு பாடசாலை வளாகத்தையும் பார்வையிட்டதை தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடினார்.
இதற்கிடையில், யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது படைப்பிரிவின் படையினர், யாழ் குடாநாட்டின் கடைக்காடு மற்றும் கெவில் பிரதேசங்களில் வசிக்கும் சிறுவர்களுக்காக விளையாட்டுக்கள், நடன அம்சங்கள் போன்ற பல வேடிக்கையான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த வறிய குடும்பங்களைச் சேர்ந்த கடைக்காடு மற்றும் கெவில் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் 125 மாணவர்களும் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் ஆசியுடன் 55 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்கள் பிரதம அதிதியாக இந்தப் பிரதேசத்தில் சிவில் - இராணுவ உறவுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இவ் ஏற்பாட்டில் கலந்து கொண்டார். நிகழ்வின் முடிவில், நிகழ்வுகளில் பங்கேற்ற சிறுவர்களுக்கு சிறப்பு மதிய உணவும் வழங்கப்பட்டது.
‘ஒவ்வொரு சிறுவருக்கும் சிறந்த எதிர்காலம்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந் நிகழ்வில், கட்டைக்காடு தேவாலயத்தின் அருட்தந்தை அமல்ராஜ், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, 52 வது படைப் பிரிவின் 522 வது பிரிகேட் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் , குருநாகல் சமுத்ரா புத்தக நிலையத்தின் பகுதியளவிலான அனுசரணையுடன் இணைந்து யாழ். கறம்பக்குறிச்சி பாடசாலை மற்றும் வரணி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் 108 சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்களையும் வழங்கினர்.
சுமார் 2,500/= ரூபா பெறுமதியான இப் பரிசு பொதிகளில் பேனாக்கள் மற்றும் பென்சில்கள், பயிற்சிப் புத்தகங்கள், A4 தாள்கள், வாசிப்புப் பொருட்கள், வண்ணமயமான கருவிகள் போன்றவை இருந்தன. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், 52 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனுரத்த பெர்னாண்டோ, 522 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க மற்றும் சில பெற்றோர்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் 522 வது பிரிகேட் வழிகாட்டுதலின் கீழ் 15 வது கஜபா படையணியின் படையினர் தமது முகாம் வளாகத்தினுள் நிகழ்வை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
அதேபோன்று, சிறுவர் தினத்தை முன்னிட்டு மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது படைப் பிரிவின் கட்டளைக்குட்பட்ட 111 வது பிரிகேட் படையினர் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் கம்பளை விக்கிரமபாவு வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 1800 மாணவர்களுக்கு மதிய உணவை வழங்கினர். இந் நிகழ்வில் அதிபர். சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினன்ட் கேணல் எச்.எம்.ஏ.பி குமார, பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, சிறுவர் தினத்தை முன்னிட்டு 7 வது விஜயபாகு காலாட்படை படையணியினர் சாவகச்சேரி றோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் கல்வி கற்கும் 21 மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை பரிசாக வழங்கினர். அந்த ஊக்கத்தொகையை கொள்வனவு செய்வதற்கு படையினர் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டனர், ஒவ்வொரு பொதியும் சுமார் ரூபா 2,000/=. ரூபா பெறுமதியாகும். 7 வது விஜயபாகு காலாட்படை படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி மேஜர் துஷார குமாரசிங்க இந்த நன்கொடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இதற்கிடையில், 141 வது பிரிகேட் படையினர் புத்பிட்டிய பீட்டர் வீரசேகர சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினுள் துப்புரவு மற்றும் புனரமைக்கும் திட்டத்தை மேற்கொண்டனர், இந்த நிகழ்ச்சியின் போது படையினர் விகாரை அறை, அனைத்து கட்டிடங்களையும் முழுமையாக வர்ணம் பூசி முழு வளாகத்தையும் சுத்தம் செய்தனர். மேலும், மதிய உணவு மற்றும் பரிசுப் பொதிகள் விநியோகம் அதே இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. 141 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அதேபோன்று, 533 வது பிரிகேட் படையினர் கல்நேவ நெலும்பத்கம ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான விசேட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தம்புள்ளை ரஜமஹா விஹாரை மற்றும் மிஹிந்தலையில் உள்ள ரொக் விகாரை ஆகிய இடங்களுக்கு யாத்திரையாக அழைத்துச் சென்றனர்.
நிகழ்வில் முடிவில், சிறுவர்களை மகிழ்விக்கும் முகமாக ஒரு சிறப்பு மதிய உணவு மற்றும் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. 533 வது பிரிகேட் தளபதியும் அன்றைய நிகழ்வுடன் இணைந்திருந்தார்.