Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd October 2022 21:46:33 Hours

2022- படையணிகளுக்கிடையிலான மேசைப் பந்து போட்டியில் 90 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட படையணிகளுக்கிடையிலான மேசைப் பந்து போட்டி 2022 செப்டெம்பர் 26 முதல் 28 வரை நடாத்தப்பட்டது. இலங்கை இராணுவ மேசைப் பந்து குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போட்டியில் 12 படையணிகளைச் சேர்ந்த 16 அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 90க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

ஆண்கள் பிரிவில் கஜபா படையணி சாம்பியன்ஷிப்பை தனதாக்கிகொண்டதுடன் இலங்கை சமிக்ஞை படையணி வீரர்கள் இரண்டாம் இடத்தைப் கைப்பற்றினர். மேலும் மகளிர் பிரிவில் இலங்கை சமிக்ஞை படையணி வீராங்கனைகள் சாம்பியன்ஷிப்பை தன்வசமாக்கிக் கொண்டதுடன், இலங்கை இராணுவ மகளிர் படையணி வீராங்கனைகள் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டனர்.

ஆண்களுக்கான போட்டியின் சிறந்த ஆட்ட நாயகனாக இலங்கை சமிக்ஞை படையணியின் சாதாரண சிப்பாய் டபில்யுஆர்எம் பிரியங்கரவும் மகளிர் பிரிவில் இலங்கை சமிக்ஞை படையணியின் சாதாரண சிப்பாய் டிஎன் ரொட்ரிகோ சிறந்த ஆட்ட வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டனர்.

போட்டியின் பரிசளிப்பு விழா செப்டெம்பர் 28 பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

பரிசளிப்பு நிகழ்வில் காலாட் படையணியின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், பிரதம சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் லலித் ஹேரத் அவர்கள் மற்றும் பல சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கை இராணுவ மேசைப் பந்து குழுவின் தலைவர் பிரிகேடியர் ரொபின் பெஞ்சமின் அவர்களின் மேற்பார்வையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.