Header

Sri Lanka Army

Defender of the Nation

04th October 2022 13:14:23 Hours

படையினர்களின் ஒருங்கிணைப்பில் பொதுமக்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கள்

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 11 வது படைப் பிரிவின் கீழுள்ள 111 வது பிரிகேட் படையினர், நன்கொடையாளர் ஒருவரின் அனுசரணையுடன், சனிக்கிழமை (1) குருநாகல் ஹிந்தகொல்ல ஸ்ரீ தர்மலோக விகாரையில் 160 இலவச உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கான ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த உலர் உணவு பொதிகள் ஒவ்வொன்றும் சுமார் 5000.00 ரூபாய் பெறுமதியானதுடன் அப்பொதியில் அரிசி, பருப்பு, தானியங்கள், ஊட்டச்சத்துக்கள், பால் மா, கோதுமை போன்றவை உள்ளடக்கியிருந்தன. மேலும் அப்பகுதியிலுள்ள நன்கொடையாளரான திரு ரஞ்சித் சிறிவர்தன என்பவர் இந்தத் திட்டத்திற்கு அனுசரணை வழங்கியதுடன் விகாரையில் வைத்து சிப்பாய்கள் மூலம் பொருட்களை விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தர்மலோக விகாரையின் பிரதம விகாராதிபதி, 111 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க, ஹிந்தகொல்ல திகம்பிட்டிய வித்தியாலய அதிபர், கிராம மக்கள் மற்றும் சிப்பாய்கள் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஆதரவளித்தனர்.