Header

Sri Lanka Army

Defender of the Nation

04th October 2022 13:02:57 Hours

போர் பயிற்சி பாடசாலையின் தலைமைத்துவ பாடநெறி நிறைவு

அம்பாறையில் உள்ள போர் பயிற்சி பாடசாலையில் நிரந்தர மற்றும் தொண்டர் படையை சேர்ந்த 81 சிரேஷ்ட ஆணையிடப்படாத அதிகாரிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட சிரேஷ்ட தலைமைத்துவ அபிவிருத்தி பாடநெறி சனிக்கிழமை (1) நிறைவு பெற்றது.

இராணுவ நடைமுறைகளுக்கு இணங்க படையினர் மற்றும் ஏணைய பணியாளர்களின் மேலாண்மை தொடர்பாக சிரேஷ்ட ஆணையிடப்படாத அதிகாரிகளின் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த பாடநெறி மேற்கொள்ளப்பட்டது.

இப் பாடநெறியில் முதலிடத்தைப் பெற்ற 8 வது இராணுவப் புலனாய்வுப் படையணியை சேர்ந்த ஆணையிடப்படாத அதிகாரி II, ஐஎம்டபில்யுஜே இத்தமல்கொட அவர்களுக்கு போர்ப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ருவான் முனிபுரவினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.