Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd October 2022 20:17:11 Hours

தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் சிறுவர் தின பாடல் வெளியிடு

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ இசைக்குழு மற்றும் கலை நிகழ்ச்சி பணிப்பகத்தினரால் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 1) (thematic) கருப்பொருள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இராணுவ இசைக்குழு மற்றும் கலை நிகழ்ச்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்பி பெஞ்சமின் அவரது சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து அதே பணிப்பகத்தில் உள்ள ஓரியண்டல் இசைக்குழு உறுப்பினர்கள் பாடிய பாடலை தயாரித்தார்.

பாடல் வரிகளை திருமதி டிகே தம்மிகா வசந்த குமாரி எழுதியுள்ளார் மற்றும் மெல்லிசை மற்றும் இசையமைப்பை மேஜர் புத்திக வன்னிநாயக்க இயற்றியுள்ளார். அத்துடன் வீடியோகிராபி மற்றும் எடிட்டிங் ஆகியவற்றினை லான்ஸ் கோப்ரல் எம் லக்க்ஷான் மற்றும் ஒலிப்பதிவு கோப்ரல் எஸ் ஹேரத் வழங்கியுள்ளதுடன்,அதே நேரத்தில் வீடியோ நடனம் மற்றும் நடன அம்சங்கள் இராணுவ நடனக் குழுவால் வழங்கப்பட்டது.

வீடியோ காட்சிகளில் பாஷி மேக்னா வன்னிநாயக்க, சானுகி சானுல்யா வன்னிநாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் மற்றும் வீடியோ காட்சி வசனத்தை மேஜர் சேனாதீர ஜயரத்ன வடிவமைத்துள்ளார்.

புதிய சிறுவர் தின பாடலை பின்வரும் இணைப்பின் மூலம் கண்டு மகிழலாம்: