Header

Sri Lanka Army

Defender of the Nation

28th September 2022 18:52:27 Hours

73 வது இராணுவ நிறைவாண்டினை முன்னிட்டு ஸ்ரீ மஹா போதியில் ஆசிர்வாத பூஜை

புத்தர் ஞானம் பெற்ற காலத்தில் அவருக்கு அடைக்கலம் அளித்த இந்தியாவை தளமாகக் கொண்ட ஸ்ரீ மஹா ஆனந்த போதியின் புனித கிளைகள் நடப்பட்டு புனிதமான புனித அனுராதபுரம் ஜய சிறி மஹா போதி வளாகத்தில் எதிர் வரும் இராணுவத்தின் 73 வது ஆண்டு (ஒக்டோபர் 10) நிறைவு மற்றும் இராணுவ தினத்தை முன்னிட்டு இராணுவ கொடிகளுக்கு ஆசிர்வாதம் பெறும் நிகழ்வு சனிக்கிழமை (24) இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து படைப்பிரிவுகளிலும் இருந்து நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.பௌத்த மத நிகழ்வுகளின் இரண்டாவது ஆசிர்வாத வணக்க நிகழ்வின் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வருகை தந்ததை அடுத்து இந் நிகழ்வு ஆரம்பமானது.பௌத்த மத சம்பிரதாயங்களுக்கு அமைய இராணுவத் தளபதி அவர்கள் வடமத்திய மாகாணத்திற்கான சங்க நாயக்கரும், எட்டு வழிபாட்டுத் தலங்களுக்கும் (அட்டமஸ்தந்திபதி) பிரதம அதிதியுமான கலாநிதி பல்லேகம சிறினிவாச நாயக்க தேரர் உடமலுவவில் அவர்களுக்கு மரியாதை செலுத்தியதுடன் சமய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முறைப்படி பௌத்த தேரருக்கு வெற்றிலை மற்றும் அடபிரிக்கர ஆகியவற்றை வழங்கி அழைப்பு விடுத்தார்.

பின்னர் பாரம்பரிய மற்றும் மங்கள இசை வாத்தியங்கள் மற்றும் நடனக் கலைஞர்களின் கலை அம்சங்களுடன் அனைத்து படையணிகளின் இராணுவ கொடிகள் எடுத்துச் செல்லப்பட்டன. மத நிகழ்ச்சிகளுக்காக 'உடமலுவா'விற்கு காவி உடை அணிந்த பௌத்த துறவிகளுடன் வளாகத்திற்கு சீராண ஆடையணிந்த சி்பபாய்களால் இராணுவ கொடிகளை ஏந்திய வண்ணம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டதோடு ஒவ்வொரு படையணிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இராணுவத் தலைமையகம், தொண்டர் படைத் தலைமையகம், அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள், அனைத்து முன்னோக்கு பாதுகாப்பு பராமரிப்புப் பகுதிகள், படைப் பிரிவுகள், பிரிகேட்டுகள், படையணிகள், பிரிவுகள் மற்றும் இராணுவப் பயிற்சிப் பாடசாலைகள் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து இராணுவக் கொடிகளும் ஆசிர்வாதங்களுக்காக வெலி மலுவவை மூன்று முறை சுற்றி எடுத்துச் செல்லப்பட்டதுடன் பின்னர் அந்த கொடிகள் மேத மலுவவில் காத்திருந்த சிரேஷ் அதிகாரிகளால் பெற்றுக்கொள்ளப்பட்டன. பின்னர் இராணுவ தளபதி மேலும் சில அதிகாரிகளுடன் புனித மரத்தின் அடிவாரத்தில் கொடிகளை மரியாதையுடன் எடுத்து வைத்தார்.

பின்னர், மகா சங்கத்தினர் 'செத்பிரித்' பராயணங்களுடன், புனித மரத்தின் அடிவாரத்தில் மல்லிகை நீரை தெளித்து, இராணுவக் கொடிகளை இராணுவத் தளபதியிடம் ஒப்படைத்து ஆசீர்வாதங்களை வழங்கினர். பின்னர் லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் ஒரே நேரத்தில் புனித போதி மரத்தை சுற்றி மல்லிகை மற்றும் தாமரை மலர்களை அணிவித்து, தேசத்தின் இன்றியமையாத பாதுகாவலர்கள் மற்றும் அதற்கு சேவை செய்யும் அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தார் என்பது குறிப்பிட தக்கதாகும்.இந் நிகழ்வில் லங்காராம ரஜமஹா விகாரையின் பிரதம குரு வணக்கத்துக்குரிய ரலபனாவே தம்மஜோதி தேரர் நிகழ்த்தப்பட்ட விசேட ‘அனுஷாசன’ (உரையாடல்கள்) நிகழ்வில் இராணுவத்தின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினர்.

ருவன்வெலிசாய விகாராதிபதி வண. கலாநிதி பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர், ஸ்ரீ ஜயந்தி விகாரையின் பிரதம அதிதியான வண. நுகத்தென்ன பஞ்ஞானந்த நாயக்க தேரர், மிரிஸ்வெட்டிய விகாராதிபதி வண. ஈத்தலவெதுனுவேவே ஞானதிலக தேரர், லங்காராமய விகாராதிபதி வண. ரலபனாவே தம்மஜோதி தேரர்,ஜேதவானாராமய விகாராதிபதி இஹல ஹல்மிலாவே ரத்தின தேரர், அபயகிரிய விகாராதிபதி கலாநிதி வண. கல்லஞ்சிய ரத்தன தேரர், துபாராமய விகாராதிபதி வண. கஹல்ல ஞானரத்ன மற்றும் பல்வேறு விகாரைகளை பிரதிநிதித்துவப்படுத்தி பௌத்த தேரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் புனித தளத்தின் அபிவிருத்திக்காக சிறப்பு பண நன்கொடை அட்டமஸ்தாநதி வண கலாநிதி பல்லேகம சிறினிவாசா அவர்களிடம் தளபதி அவர்களால் வழங்கப்பட்டது.

எதிர்வரும் 73 வது இராணுவ ஆண்டு நிறைவு மற்றும் இராணுவ தினத்தை (அக்டோபர் 10) முன்னிட்டு ஆசிர்வாத நிகழ்வில் இராணுவத்தின் வண்ணமயமான மற்றும் இரண்டாவது கொடி ஆசீர்வாத நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் படையினர், பிரதிநிதிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வில் பதவி நிலை பிரதானி, பிரதி பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி, பிரதான பதவி நிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.