Header

Sri Lanka Army

Defender of the Nation

26th September 2022 18:30:34 Hours

படையினரின் உதவியுடன் மாணவர்களுக்கு தளவாடங்கள் வழங்கல்

முல்லைத்தீவு, வள்ளிபுனம் பிரதேசத்தில் உள்ள வறிய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்குடன் 681 வது பிரிகேட் படையினரால் உள்நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, ஆறு மேசைகள் மற்றும் ஆறு கதிரைகள் என்பவற்றினை செய்து செஞ்சோலை விளையாட்டு மைதானத்தை அண்மித்துள்ள இடத்தில் மேலதீக வகுப்புக்களை நடாத்துவதற்காக வழங்கியுள்ளனர்.

75 சிறுவர்கள் பாடசாலை நிறைவடைந்த பின்னர் மேலதீக கற்பித்தல் அமர்வுகளுக்கான சரியான கதிரைகள் மற்றும் எழுதும் பாகங்கள் இல்லாமல் இருப்பதனை படையினர் கண்டறிந்ததுடன் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய வளங்களுடன் அந்த தளபாடங்களை நிர்மாணி்த்து வழங்க முன்வந்தனர். இவற்றை மேற்கொள்ளவதற்கு படையினருக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆதரவு அளித்துடன் அவர்கள் மேசைகள் மற்றும் கதிரைகள் வழங்குவதனை குறித்து இராணுவத்தை பாராட்டினர்.