Header

Sri Lanka Army

Defender of the Nation

27th September 2022 16:55:30 Hours

தேசிய கால்பந்து அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று இராணுவ வீரர்கள் கட்டாரில் பயிற்சி

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் உறுப்பினர்களாக திகழ்ந்த இலங்கை இராணுவ கால்பந்தாட்ட வீரர்களான 8 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் லான்ஸ் கோப்ரல் எம்.எ.எ ரகுமான், 2 வது (தொ) கஜபா படையணியின் சாதாரன சிப்பாய் எம்.ஜே.ஆர் மொஹமட் மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சாதாரன சிப்பாய் எஸ்.டி ஜயசேகர ஆகியோர் கத்தாரில் பயிற்சியில் ஈடுபட அழைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் எச்.ரத்நாயக்க அவர்களின் தலைமையிலான மூன்று வீரர்களும் எதிர்வரும் தெற்காசிய கால்பந்து போட்டியில் தேசிய கால்பந்து அணியில் உள்ள ஏணைய அணி வீரர்களுடன் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைக் காலத்தில் பிரிகேடியர் கே.ஏ.யு கொடித்துவக்கு அவர்களின் தலைமையிலான இராணுவக் கால்பந்தாட்டக் குழுவின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக, கொரோனா தொற்றுக்குப் பின்னர் இராணுவத்தில் கால்பந்து ஒரு தூண்டுதலைப் பெற்றதுடன், இதன் விளைவாக தேசிய கால்பந்து அணிக்கு அந்த மூன்று கால்பந்து வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த ஆறு மாதங்களில் அந்த மூன்று வீரர்களும் பிரிகேடியர் கே.ஏ.யு கொடித்துவக்கு மற்றும் கால்பந்து பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் பல பயிற்சி நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர்.