Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd September 2022 16:34:14 Hours

லெப்டினன் கேணல் பிரஜாத் விஜேசிங்க காலமானார்

7 வது கஜபா படையணியின் லெப்டினன் கேணல் பிரஜாத் விஜேசிங்க என பரவலாக அறியப்படும் லெப்டினன் கேணல் கே.பி.எம் த ஏ விஜேசிங்க அவர்கள் தனது 54 வது வயதில் சுகயீனமுற்ற நிலையில் வியாழக்கிழமை (22) காலமானார்.

அவர் திடீரென காலமான போது, கலாஓயாவில் உள்ள இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தில் I (நிர்வாகம்) அதிகாரியாக பணியாற்றினார்.

அவர் தனது சேவையின் போது, இராணுவ ஊடக பணிப்பகத்தில் பொது பதவி நிலை அதிகாரி II (நிர்வாகம்), 11 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய நியமனங்களை வகித்தார்.

அவரது இறுதிச் சடங்குகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.