Header

Sri Lanka Army

Defender of the Nation

21st September 2022 10:00:01 Hours

அதிகாரிகளுக்கு 'கோட்பாடு' தொடர்பான விரிவுரை

பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மற்றும் ஆராய்ச்சிகள் மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவத்தில் உள்ள அதிகாரிகளுக்கு இராணுவ கோட்பாடுகள் தொடர்பான தொடர் விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் விரிவாக்கமாக ஆராய்ச்சிகள் மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் கேணல் கோட்பாடு லெப்டினன்ட் கேணல் டிஎல்யு டீ தாப்ரூ அவர்களால் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி பயிற்சி தினத்திற்கு இணையாக, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி அதிகாரிகளுக்கு கோட்பாடு தொடர்பான விரிவுரை 2022 செப்டம்பர் 15 நிகழ்த்தப்பட்டது.

இந்த விரிவுரையில் இயந்திர பொறியியல் படையணியின் கேணல் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் 52 அதிகாரிகள் பங்கேற்றனர்.