Header

Sri Lanka Army

Defender of the Nation

20th September 2022 20:15:35 Hours

விஜயபாகு காலாட் படையணி ஓய்வுபெற்ற படைவீரர்கள் ஆண்டு பொது கூட்டத்தில் ஒன்றிணைவு

விஜயபாகு காலாட் படையணியின் முன்னாள் படைவீரர் சங்கத்தின் 13 வது வருடாந்த பொதுக்கூட்டம் குருநாகல், போயகன விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் உள்ள சல்யூட் பல்நோக்கு மண்டபத்தில் சனிக்கிழமை (17) இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இராணுவத் தலைமையகத்தின் பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்கள் கலந்துகொண்டார். வரவேற்பு உரை, பாரம்பரிய மங்கள விளக்கு ஏற்றுதலை தொடர்ந்து வரவு செலவு அறிக்கைகள் சமர்ப்பித்தல் ஆகியவற்றுடன் சங்கத்தின் சட்டத்தில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சங்கத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் காவிந்த குணவர்தன (ஓய்வு) நியமிக்கப்பட்டார். வருடாந்தப் பொதுக் கூட்டத்தின் போது உறுப்பினர்கள் தங்கள் எதிர்காலப் பணிகள் பற்றிய கருத்துக்களையும் யோசனைகளையும் தெரிவிக்கும் வாய்ப்பைப் பெற்றதோடு, குழுவின் நல்ல பணி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை சங்கத்தின் உறுப்பினர்களால் பாராட்டப்பட்டது.

488 க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விஜயபாகு காலட் படையணி படைத் தளபதி ஆகியோர் இக் கூட்டத்தில் இணைந்து கொண்டனர்.