Header

Sri Lanka Army

Defender of the Nation

20th September 2022 13:11:07 Hours

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தில் 'தலைமைத்துவம்' தொடர்பில் விரிவுரை

வாத்துவ, தலதாவத்தை புராதண மகா விகாரையின் பிரதம குருவின் வேண்டுகோளுக்கு இணங்க, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், 2022 செப்டெம்பர் 12 ஆம் திகதி விகாரை வளாகத்தில் பாடசாலை மாணவர்களுக்கான ‘தலைமைத்துவம்’ தொடர்பான செயலமர்வை நடாத்துவதற்கு உதவிகளை வழங்கியது.

12 வது களப் பொறியியலாளர் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கே.ஏ.என்.பி.கே கொடித்துவக்கு தலைமையில் இந்த செயலமர்வு இடம்பெற்றது. வாத்துவ மத்திய கல்லூரி, வாத்துவ பெண்கள் பாடசாலை, வாத்துவ புனித மரியாள் கல்லூரி, வேரகம கனிஷ்ட கல்லூரி மற்றும் பின்வத்தை கனிஷ்ட கல்லூரியைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த செயலமர்வில் கலந்துகொண்டனர்.

இப் பயிலரங்கில், சமுதாயத்தில் நன்னடத்தை உடைய மாணவர்களாக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், சமுதாயத்தில் மரியாதைக்குரிய நபராக மாறுவதற்கான வழி, பரஸ்பர மரியாதையின் முக்கியத்துவம் மற்றும் குழுச் செயற்பாட்டின முக்கியத்துவம் போன்றவை குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது.