Header

Sri Lanka Army

Defender of the Nation

20th September 2022 13:18:44 Hours

புதிய இலங்கை இராணுவத் தொண்டர் படை முகிழ்நிலை அதிகாரிகள் அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன் வரவேற்கப்பட்டனர்.

புதிதாகத் விடுகைப் பெற்ற முகிழ்நிலை அதிகாரிகள் தொழிற்துறை நிபுணத்துவ அதிகாரிகள் நேரடி பயிலிளவல் பாடநெறியை நிறைவுசெய்து, அந்தந்தத் தொழில்களில் புதிய கடமைகள் மற்றும் வகிபாங்குகளை ஏற்க வியாழக்கிழமை (14). இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் (SLAVF) தலைமையகத்திற்கு வந்தபோது அன்புடன் வரவேற்கப்பட்டனர்.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, குறித்த 15 முகிழ்நிலை அதிகாரிகளையும் வரவேற்று, அவர்களது அலுவலகத்திற்கு வந்தவுடன் அவர்களுடன் ஆற்றிய சுருக்கமான உரையின் போது, இராணுவ தொழில்முறை நெறிமுறைகளின் பின்னணியில் அவர்களின் நீடித்த அர்ப்பணிப்பு, விசுவாசம் மற்றும் ஒருமைப்பாட்டின் அவசியத்தை சுட்டிக் காட்டினார்.

இவர்களுக்கு ஆயிரக்கணக்கான உயர்தர அதிகாரிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் கௌரவம் மற்றும் கௌரவமான இராணுவ வாழ்க்கையை வழங்கியுள்ள தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் (SLMA) அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட்டது,

மேலும், இவ்விழாவில் இலங்கை தொண்டர் படையணியில் பணிபுரிதல், முன்னேற்றம் உட்பட, சேர்க்கை முதல் ஓய்வு வரையிலான நிர்வாக விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் இராணுவத் தலைமையகத்தின் முன்னோக்கு திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் பிரிவின் பிரிகேடியர் ரவி ஹேரத், சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை இராணுவ தொண்டர் படையணி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.