21st September 2022 11:59:01 Hours
இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் பிஏ கருணாதிலக (ஓய்வு) ஆர்டப்ளியுபீ 2022 செப்டம்பர் 20 அன்று தனது 79வது வயதில் சுகவீனம் காரணமாக காலமானார்.
அவர் இராணுத்தில் சேவையாற்றும் போது முதலாம் அதிரடிப்படை தளபதி, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, மற்றும் பிரதி ஒட்டுமொத்த நடவடிக்கைத் தளபதியாக பணியாற்றியுள்ளார். அத்தோடு இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதியாகவும் பதவி வகித்தார்.
பூதவுடல் இல. 50/3/1, கலேதண்ட ரஜமஹா விஹாரய மாவத்தை, குருகுலாவ, ராகம என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி கிரியைகளின் பின்னர் 2022 செப்டம்பர் 22 அன்று மாலை 4.30 மணிக்கு எல்தெனிய மயானத்தில் இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படும்.