Header

Sri Lanka Army

Defender of the Nation

20th September 2022 20:00:35 Hours

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி தாவுல்வெவ பட்டாலியன் பயிற்சி பாடசாலைக்கு விஜயம்

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன திங்கட்கிழமை (19) 2 வது (தொ) கஜபா படையணி படையினர் பயிற்சி பெற்றுவரும் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்குட்பட்ட தவுல்வெவவில் உள்ள பட்டாலியன் பயிற்சிப் பாடசாலைக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

வருகை தந்த கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி பட்டாலியன் பயிற்சி பாடசாலை நுழைவாயிலில் காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் தாவுல்வெவ படையணி பயிற்சிப் பாடசாலையின் தலைமைப் பயிற்றுவிப்பாளர், வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு பாடசாலையில் நடைபெற்று வரும் பட்டாலியன் பயிற்சிகள் குறித்து சுருக்கமாக விளக்கினார்.

மேலும், அன்றைய பிரதம விருந்தினர் பாடநெறியில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் உரையாற்றியதுடன், பயிற்சி மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இறுதியாக, வருகை தந்த தளபதி அவர்கள் பயிற்சி அட்டவணைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தேவைகள் குறித்து பாடநெறி பயிற்றுவிப்பாளர்களுடன் கலந்துரையடினார்.

இந்நிகழ்வில் 22 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹாரே, 221 வது பிரிகேட் தளபதி கேணல் சுஜீவ ரத்நாயக்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.