Header

Sri Lanka Army

Defender of the Nation

20th September 2022 21:45:57 Hours

இராணுவத்தின் 73 வது பிறந்தநாளைக் கொண்டாட அனைவரும் தயார்

தேசத்தின் இன்றியமையாத பாதுகாவலர்களான இலங்கை இராணுவம் 2022 ஒக்டோபர் 10 ஆம் திகதி தனது 73 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. உலகில் போர்க்களத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் தொழில்முறை அமைப்புகளில் ஒன்றான இலங்கை இராணுவம் இங்கும் வெளிநாடுகளிலும் பல துறைகளில் புதிய சாதனைகளை படைத்துள்ளது.

இராணுவத் தலைமையகம், பத்தரமுல்லையில் உள்ள போர்வீரர் நினைவுச் சின்னம், இராணுவ தின அணிவகுப்பு மற்றும் இன்னும் சில முறையான பிரதான ஏற்பாடுகள் இடம்பெறுவதற்கு முன்னர் கதிர்காமம், அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா விகாரை, கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசல், வெள்ளவத்தை மயூரபதி கோவில், ஸ்ரீ தலதா மாளிகை, பொரளையில் உள்ள புனித தேவாலயம் ஆகிய இடங்களில் அனைத்து மத சடங்குகளும் இடம்பெறுகின்றன.

பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் படையினருடன் ஆண்டு நிறைவு விழாக்களில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.