Header

Sri Lanka Army

Defender of the Nation

20th September 2022 13:13:35 Hours

541 வது பிரிகேடின் 12 வது ஆண்டு நிறைவு

54 வது படைப் பிரிவின் 541 வது பிரிகேட் தலைமையகத்தின் 12 வது ஆண்டு நிறைவானது செப்டம்பர் 9-10 ஆம் திகதிளில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமானது. இந் ஆண்டு நிறைவை முன்னிட்டு (10) பிரிகேட் தளபதி பிரிகேடியர் தசந்த முனசிங்க அவர்களுக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க பிரிகேட் தலைமையக வளாகத்தில் படையினரால் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து 12 வது (தொ) இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஏஏஎஸ் அமரதுங்க வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, அவர் வளாகத்தில் ஒரு வேப்ப மரக்கன்டொன்றை நட்டார். பின்னர் அவர் குழு புகைப்படங்கள், படையினருக்கு விரிவுரை மற்றும் தேநீர் விருந்துபசாரம் ஆகியவற்றில் கலந்து கொண்டார். நிறைவாண்டினை முன்னிட்டு மன்னார் பெரியமடு சின்ன சன்னாரில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரான முன்னாள் போராளி ராமசாமி ஜெய் ரஞ்சன் அவர்களுக்காக இராணுவத்தினரால் மலசலகூடம் புனரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கதாகும். போராளியான இவர் விடுதலைப் புலி உறுப்பினராக இருந்த போது தனது இரண்டு கால்களையும் இழந்திருந்தார்.

ஆண்டு நிறைவை முன்னிட்டு இரண்டு ஜோடி ஊன்றுகோல்கள் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்கு புத்தகங்கள், பைகள் மற்றும் ஏனைய பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.

அதே நாள் மாலை அனைத்து படையினருக்கும் இசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து நிகழ்வு நிறைவடைந்தது.