20th September 2022 13:16:24 Hours
முதலாவது படையணி மற்றும் அதன் பிரிவுகளின் கீழ் பணிப்புரியும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு 'சட்ட அமுலாக்கத்தில் இராணுவத்தின் பயன்பாடு’ என்ற தலைப்பிலான விரிவுரை 07 செப்டம்பர் 2022 இடம் பெற்றது. இந்த விரிவுரை மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ் விரிவுரையை 9 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஐ.எம்.எஸ்.எஸ்கே.இளங்ககோன், மற்றும் மேஜர் கே.ஏ.பி.ஏ.ரத்நாயக்க. ஆகியோரால் நிகழ்தப்பட்டதுடன், பங்கேற்பாளர்களுக்கு மனித உரிமைகள் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரங்கள், அடிப்படைக் கோட்பாடுகள், கைது/தடுப்பு மற்றும் தேடுதல்/கைப்பற்றுதல் போன்றவை தொடரபாக கற்பிக்கப்பட்டது.
இவ் விரிவுரையில் முதலாவது படையணி தலைமையகம் மற்றும் அதனுடன் இணைந்த வழங்கள் பிரிவுகளில் இருந்து மொத்தம் 272 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.