Header

Sri Lanka Army

Defender of the Nation

18th September 2022 17:59:38 Hours

குத்துச்சண்டை போட்டியில் விஜயபாகு காலாட் படையணி வீரர்கள் வெற்றி

இராணுவத்தின் 3வது படையணிகளுகிடையில் நடைபெற்ற போட்டி 04 செப்டெம்பர் 2022 அன்று பனாகொட இராணுவ வளாக உள்ளக விளையாட்டரங்கில் (ஜிம்னாசியம்) ஆரம்பமானது.

தியத்தலாவ துப்பாக்கி சூட்டு பயிற்சிப் பாடசாலையின் தளபதியும் இராணுவ குத்துச் சண்டை குழுவின் தலைவரும் தேசிய குத்துச் சண்டை தெரிவுக் குழுவின் உறுப்பினருமான பிரிகேடியர் சங்க ஜயமஹா அவர்களின் மேற்பார்வையின் கீழ் அந்தந்த படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 100 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டனர்.

இப்போட்டியின் போது விஜயபாகு காலாட் படையணி குத்துச் சண்டை வீரர்கள் 11 கோல்களை பெற்று வெற்றியீட்டியதுடன் கஜபா படையணி 7 கோல்களை பெற்று போட்டியின் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது. மேலும், இலங்கை இராணுவ மகளிர் படையணியின் ஆர்வமிக்க வீராங்கனைகள் 6 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை சமிக்ஞைப் படையணியை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்கள் 3 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பிரிகேடியர் சங்க ஜயமஹா அவர்கள் கலந்து கொண்டு போட்டிகளை நேரில் பார்வையிட்டார். ஜூரி குழுவிற்கு தேசிய குத்துச் சண்டை பயிற்சியாளர் கேணல் பிரியங்க பெரேரா தலைமை தாங்கினார். 3 சிவில் நடுவர்கள் மற்றும் 9 இராணுவ நடுவர்கள் அடங்கிய நடுவர் குழுவினால் போட்டி மத்தியஸ்த்தம் செய்யப்பட்டது.

இறுதிப்போட்டியின் நிறைவில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.