Header

Sri Lanka Army

Defender of the Nation

18th September 2022 18:07:27 Hours

65 வது படைப்பிரிவு மூலிகை தாவரங்களை பாதுகாக்க 'ஓசு உயன' திட்டம்

சுதேச மருத்துவ தாவரங்களை வளர்ப்பதை ஊக்குவிக்கும் நோக்கில், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவினரால் வெள்ளிக்கிழமை (16) துணுக்காய் 65 வது படைப்பிரிவு முகாம் வளாகத்தினுள் 'ஒசு உயன' ஆரம்பிக்கப்பட்டது.

65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க அவர்கள் இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சுமார் 70 அரிய வகை மருத்துவ தாவரங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட நாட்டு மருத்துவ தாவரங்கள் நடப்பட்டன.

எதிர்கால சந்ததியினருக்காக மதிப்புமிக்க மூலிகை செடிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் 65 வது படைப்பிரிவு தலைமையகத்தின் கீழ் உள்ள அமைப்புகளிலும் அலகுகளிலும் இத்தகைய மூலிகை தோட்டங்களை நிறுவுவதற்கு மேலும் உத்தேசித்துள்ளது. இந்நிகழ்வு பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு) லெப்டினன் கேணல் ரசிக குமார அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்நிகழ்வில் 65 வது படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.