18th September 2022 18:10:56 Hours
1980 களின் நடுப்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு தனது நிபுணத்துவத்தை விரிவுபடுத்திய இலங்கை இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், 1980 களின் நடுப்பகுதியில் நிறுவப்பட்ட "மனித வள மேலாண்மை" என பெயரிடப்பட்ட உள்நாட்டு தயாரிப்பைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் தரவுத்தளத்தை டிஜிட்டல் மயமாக்க வியாழக்கிழமை (13) உதவியது.
இது தொடர்பாக, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் சுமார் 35,000 பணியாளர்களுக்கு மனித வள உட்கட்டமைப்பை நிர்வகிக்கும் ஒரு புதிய மென்பொருள் தீர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இராணுவத்தால் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பமானது இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தினால் செயல்படுத்தப்படுகிறது.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே (ஓய்வு), அவர்கள் இலங்கை இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் பிரிகேடியர் சஜித் லியனகே மற்றும் மொரட்டுவ கட்டுபெத்த சிவில் பாதுகாப்பு திணைக்கள தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் இது உத்தியோகபூர்வமாக 13 செப் 2022 அன்று ஆரம்பிக்கப்பட்டது.