Header

Sri Lanka Army

Defender of the Nation

18th September 2022 18:14:16 Hours

513 வது பிரிகேடினால் பெண் கிரிக்கெட் வீராங்கனைக்கு புதிய வீடு நிர்மாணிப்பு

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தெரிவாகியுள்ள யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியைச் சேர்ந்த கிறிஸ்டிகா செல்வராசா என்ற யுவதியின் விளையாட்டுத் திறமைகளை மேலும் ஊக்குவிக்கும் முயற்சியாக நல்லூரை தளமாகக் கொண்ட தியாகி அறக்கட்டளை உடன் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் இணைந்து அவரது குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மானிப்பதற்காக மனிதவளம், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் திறன்களை வழங்கியது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் ஆசிர்வாதத்துடன் 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.ஏ. உதய குமார, 513 ஆவது பிரிகேட் தளபதி கேணல் எம் ரிஸ்வி ராசிக், ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் பாடசாலை மாணவியான பெண் கிரிக்கெட் வீராங்கனை அவர் ஆற்றிய சாதனைகளைப் பாராட்டும் வகையில் புதிய வீட்டை நிர்மாணிக்கும் திட்டத்தை 51 வது படைப்பிரிவின் 513 வது பிரிகேடின் 16 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

வெளிநாட்டைச் சேர்ந்த தியாகி அறக்கட்டளையின் தலைவர் திரு வாமதேவன் தியாகேந்திரன் அவர்கள் இராணுவத்தின் சமூகம் சார்ந்த திட்டங்களுக்கு தீவிர ஆதரவாளராக இருப்பவர், நல்லெண்ணம் மற்றும் புரிதலின் நோக்கமாக, இந்த பெண்ணுக்கு புதிய வீட்டைக் நிர்மாணிப்பதற்கான நிதி ஊக்குவிப்புகளை வழங்கினார். 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உதய குமார, 513 வது பிரிகேட் தளபதி கேணல் ரிஸ்வி ராசிக் அவர்கள் அவர்களின் ஆசிர்வாதத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி அவர்கள் அனுசரணையாளரின் உதவியை பெற்றுக் கொண்டார். பயனாளியின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெளிநாட்டைச் சேர்ந்த நன்கொடையாளர் வழங்கிய புலமைப்பரிசில் மூலம் மாதாந்தம் ரூ. 5000/= ஒதுக்கீட்டில் நிலையான கிரிக்கெட் பயிற்சியைத் தொடரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

வெள்ளிக்கிழமை (16), 51 வது படைப்பிரிவின் தளபதி, அனுசரணையாளர் மற்றும் 513 ஆது பிரிகேட் தளபதியுடன் இணைந்து இந்து சமய ஆசீர்வாதங்கள் மற்றும் சமய பாரம்பரியங்களுக்கு மத்தியில் சுள்ளிபுரத்தில் புதிய வீட்டு அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பிறகு, 51 வது படைப்பிரிவின் தளபதி, வளரும் விளையாட்டு வீராங்கனையின் குடும்பத்திற்கு பண நன்கொடையையும் வழங்கினார்.