Header

Sri Lanka Army

Defender of the Nation

15th September 2022 19:00:47 Hours

பௌத்த பிக்குவின் ஆதரவுடன் 682 பிரிகேட் படையினரால் பொதுமக்களுக்கு நிவாரணப் பொதிகள் விநியோகம்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் வேண்டுகோளிற்கமைய பௌத்த பிக்குகளின் அனுசரணையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச பொதுமக்களின் நலன் கருதி நல்லிணக்கம் மற்றும் இன நல்லிணக்கத்திற்கான கூட்டு மனிதாபிமான திட்டம் திங்கட்கிழமை (12) ஆரம்பித்ததுடன் தெற்கின் பௌத்த பிக்குகள் வழங்கிய அனுசரணைக்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.

சிங்கப்பூர் பௌத்த நூலகத்தின் ஆலோசகரும், பெல்லன்வில ரஜமஹா விகாரையின் பிரதம தேரருமான கலாநிதி பெல்லன்வில தம்மரத்ன நாயக்க தேரரின் அனுசரணையில், முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் 682 பிரிகேட் படையினரால் நன்கொடைகள் வழங்கப்பட்டன. அதற்கமைய பொருளாதாரச் சுமையை கருத்திற் கொண்டு மொத்தம் 125 உலர் உணவுப் பொதிகள் பொதுமக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது. அப் பொதிகளில் அரிசி, பருப்பு, மசாலா, சவர்காரம், தானியங்கள், பால் மா போன்ற உலர் உணவு பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது. இத் தி்ட்டம் கொழும்பு றோயல் கல்லூரியின் பௌத்த சகோதரத்துவ சங்கத்தின் பிரதம புரவலர் வண. கவரகிரியே பிரேமரதன தேரரால் ஒருங்கிணைக்கப்பட்டது.

விநியோகத்தின் போது கலாநிதி பெல்லன்வில்ல தம்மரதன தேரர் சொற்பொழிவு நிகழ்த்தியதுடன், முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிக்கு இத்தகைய சமூகம் சார்ந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்களால் சில நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் பொன்னம்பெரும, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் வசந்த பாலம்கும்புர, 682 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கல்லப்பத்தி ஆகியோருடன் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.