Header

Sri Lanka Army

Defender of the Nation

14th September 2022 17:30:18 Hours

மேற்குத் தளபதி தொம்பகொட இலங்கை இராணுவ போர்கருவி படையணி தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 13வது தளபதியாக பதவியினை பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்கள் நேற்று திங்கட்கிழமை (12) தொம்பகொடவில் உள்ள இலங்கை இராணுவ போர்கருவி படையணி தலைமையகத்திற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இத் தலைமையக வளாகத்தில், வருகை தந்த படைத் தளபதியை, நிலையத் தளபதி பிரிகேடியர் அஜித் முனசிங்க மற்றும் அவரது அதிகாரிகள் பதவி நிலை வரவேற்றனர். பின்னர், மேற்குத் தளபதிக்கு படையினர்களின் பங்கு மற்றும் பணிகள் தொடர்பாக இராணுவ போர்கருவி படையணியின் நிலையத் தளபதி விளக்கமளித்தார்.

பின்னர், மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி, தொம்பகொட தொழிற்சாலையில் உள்ள டயர் புதுப்பிக்கும் பிரிவு உட்பட முகாமுக்குள் பல முக்கிய இடங்களை பார்வையிட்டதுடன், அங்கு பணியாற்றும் படையினரின் நலன்களையும் கேட்டறிந்தார்.

மேலும், முகாமின் நலன் மற்றும் தரத்தை உயர்த்துவதற்காக மேற்கு தளபதி சில பரிந்துரைகளை வழங்கியதோடு அதே வளாகத்தில் உள்ள இலங்கை இராணுவ போர்க்கருவி பயிற்சிப் பாடசாலைக்கும் வருகை தந்த அவர், பயிற்சிகளையும் பார்வையிட்டு மாணவர்களுடன் உரையாடினார்.

இறுதியாக, அன்றைய வருகையின் முடிவைக் குறிக்கும் வகையில், முகாம் வளாகத்தில் இருந்து புறப்படும் முன் மேற்குத் தளபதி ' அதிதிகள்' புத்தகத்தில் தனது பாராட்டுக் குறிப்பையும் எழுதினார்.

மேலும், செல்லும் வழியில், மேற்குத் தளபதி புலத்சிங்கள மற்றும் வாத்துவாவில்உள்ள பல இடங்களுக்குச் சென்றதுடன் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 61 வது படைப் பிரிவின் தளபதி, 612 பிரிகேட் தளபதி மற்றும் அந்தந்த கட்டளை அதிகாரிகளுடன் தனது கருத்துக்களை பரிமாரிக் கொண்டார்.

61 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொகான் ரத்நாயக்க, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பதவி நிலை அதிகாரிகள் தளபதியின் விஜயத்தில் இணைந்திருந்தனர்.