Header

Sri Lanka Army

Defender of the Nation

12th September 2022 20:13:35 Hours

பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களுக்கு ‘வாகன பராமரிப்பு’ தொடர்பான செயலமர்வு

ருஹுணு பல்கலைக்கழகத்தினால் பூசவில் அமைந்துள்ள 61 வது படைப்பிரிவு தலைமையகத்தினருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைய பட்டதாரிகளுக்கான ‘வாகன பராமரிப்பு மற்றும் அதன் அத்தியாவசிய செயற்பாடுகள்’ தொடர்பான செயலமர்வு அப்படைப்பிரிவு தலைமையகத்தில் கடந்த 2022 செப்டெம்பர் 6 நடாத்தப்பட்டது.

கராப்பிட்டிய மருத்துவ பீடத்தின் பட்டதாரிகள் கலந்து கொண்ட கோட்பாட்டு மற்றும் நடைமுறை தொடர்பான ஒரு நாள் செயலமர்வானது 61 வது படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டலின் கீழ், இடம் பெற்றதுடன், இச் செயலமர்வை பூஸ்ஸ பயிற்சி பட்டறையின் கட்டளை அதிகாரி மற்றும் அவரது தொழில்நுட்ப பணியாளர்களால் நடாத்தப்பட்டது.

22 மருத்துவ மாணவர்கள் கலந்துக் கொண்டதுடன் செயலமர்வில் வளவாளர்களுடன் கலந்துரையாடல் பகுதியும் இடம்பெற்றது.