Header

Sri Lanka Army

Defender of the Nation

12th September 2022 20:07:02 Hours

உடற்பயிற்சி பயிற்றுனர்கள் விடுகை

உதவி உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள் பாடநெறி இலக்கம் - 126 இன் விடுகை அணிவகுப்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (09) பனாகொடை இராணுவ உடற்கல்விப் பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது.

இப் பாடநெறியில் 164 உடற்கல்வி பயிற்றுவிப்பாளர்களாக தகுதி பெற்றுள்ளதோடு 38 உடற்கல்வி பயிற்றுனர்கள் தேசிய தொழிற்கல்வி தகுதி நிலை - 4 ஐ எட்டியவர்களாக சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதிப் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார். இராணுவ உடற் பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் ருக்ஷான் கன்னங்கர, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.

இப் பாடநெறியின் சிறந்த மாணவியாக இலங்கை மகளிர் படையணியைச் சேர்ந்த வீராங்கனை R.M.K தில்ஹாரா முதலாம் இடத்தையும், பாடநெறியின் சிறந்த மாணவராக விஷேட படையணியை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.ஜி.ஏ.எஸ். தயானந்த முதலாம் இடத்தையும் பெற்றனர். உதவி உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறியின் சிறந்த உடற்பயிற்சி வீரருக்கான விருதை இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சிப்பாய் எஸ்.ஹெட்டியாராச்சியும் சிறந்த சகிப்புத்தன்மைக்கான விருதினை இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சிப்பாய் எஸ்.எஸ்.ஏ.எச்.எம்.ஹேரத் பெற்றுக்கொண்டார். கொமாண்டோ படையணியை சேர்ந்த கோப்ரல் டபிள்யூ.கே.சம்பத், உதவி உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடப்பிரிவின் சிறந்த அணி கட்டளையாளராக தெரிவு செய்யப்பட்டார்.

அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட பயிற்றுனர்கள் இந் நிகழ்வை கண்டுகளித்தனர்.