Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2022 16:00:56 Hours

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் உதவி

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் செவ்வாய்கிழமை (6) மட்டக்குளிய கிராம அலுவலர் 259 வது பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 100 பொதுமக்களுக்கு மேற்பட்டவர்களுக்கு சமைத்த உணவுப் பொதிகளை வழங்கினர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் கீழுள்ள 142 வது பிரிகேட் தலைமையகத்தின் 7 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர், மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், அந்த உணவுப் பொதிகளை தயாரித்து, அப்பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, பெருமழையையும் பொருட்படுத்தாமல் விநியோகத் திட்டத்தை முன்னெடுத்தனர்.

14 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ரொஹான் ஜயமான்ன அவர்கள் இந்த திட்டத்தை நெருக்கமாக ஒருங்கிணைத்து மேற்பார்வையிட்டார்.

அதேபோன்று, படையினர் நீர் நிலைகளை கண்காணித்து, நிவாரண உதவிகளை எளிதாக்க அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு உதவினர்.