05th September 2022 18:23:50 Hours
53 வது படைப் பிரிவைச் சேர்ந்த சகல படையினருக்கும் மனநலம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான ஒரு வேலைத்திட்டம் கணேமுல்லையில் உள்ள கொமாண்டோ படையணியின் தலைமையகத்தில் ஐந்து நாட்களுக்கு நடைபெற்றது.
முதலாவது படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன அவர்களின் ஆசிர்வாதத்துடன் 53 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உதய ஹேரத்தின் வேண்டுகோளின் பேரில் முன்னெடுக்கப்பட்ட இந்த செயலமர்வில் 24 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 12 வது இலங்கை சிங்கப் படையணி, 5 கெமுனு ஹேவா படையணி, 3 வது கஜபா படையணி, 1 வது விஜயபாகு காலாட்படையணி மற்றும் 6 வது இலங்கை இலேசாயுத காலாட்படையணி ஆகியவற்றில் இருந்து மொத்தம் 12 அதிகாரிகள் மற்றும் 300 சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.