Header

Sri Lanka Army

Defender of the Nation

05th September 2022 18:25:50 Hours

படையினர் அனுராதபுரத்தில் இயற்கை முறையில் நெல் அறுவடை

அரசாங்கத்தின் உணவு ஊக்குவிப்புத் திட்டத்திற்கு இணங்க சேதன பசளைகளை பயன்படுத்தி வட மத்திய முன்னரங்கு பாதுகாப்பு பகுதி படையினரால் விதைக்கப்பட்ட நெற்பயிர் செய்கையானது, செவ்வாய்க்கிழமை (30) அனுராதபுரத்தில் பாரம்பரிய முறையின்படி அறுவடை செய்யப்பட்டது.

வட மத்திய முன்னரங்கு பாதுகாப்பு பகுதி தளபதி மேஜர் ஜெனரல் எம்.இ.பி வீரசிங்க அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின் பேரில், இந்த ஆண்டு மே மாதம் சேதன பசளைகளை பயன்படுத்தி, கைவிடப்பட்ட இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விதைக்கும் முயற்சியை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.

ஓகஸ்ட் 30 அன்று, மேஜர் ஜெனரல் எம்.இ.பி வீரசிங்க அவர்களும் அவரது படையினரும் பழங்கால சம்பிரதாயங்களின்படி அறுவடை சடங்குகள் இடம் பெற்றன. மேலும் இதன் போது சம்பா, பாஸ்மதி மற்றும் ரன் கஹவானு நெல் வகைகளை அறுவடை செய்தனர்.

நெல் அறுவடை நிகழ்விற்கு வருகை தந்த மிரிசாவதிய பிரதம விகாராதிபதியும், ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தருமான வண. ஈத்தல வெதுனுவெவே ஞானதிலக தேரர் இந்த முயற்சிகளுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.

வட மத்திய முன்னரங்கு பாதுகாப்பு பகுதியின் கேணல் வருண பெரேரா, மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் பிரகதிசேவா அறக்கட்டளையின் பணிப்பாளருமான திரு. குமுது குணவர்தன ஆகியோரும் இந்நாள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.