Header

Sri Lanka Army

Defender of the Nation

04th September 2022 20:59:17 Hours

இராணுவ தொண்டர் படையினருக்கு 'தேனீ வளர்ப்பு' தொழில் பற்றிய பயிற்சி

இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யாபாவின் ஆலோசனையின் பேரில், இலங்கை இராணுவத் தொண்டர் படையினால், தேனீ வளர்ப்புத் துறையினை மேம்படுத்தும் முகமாகவும், அதனை ஊக்குவிக்கும் முகமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட படையினருக்கு இராணுவத் தொண்டர் படை தலைமையகத்தில் 26 ஓகஸ்ட் 2022 அன்று தேனீ வளர்ப்புத் தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டது.

குறித்த தேனீ வளர்ப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற 22 வது படைப்பிரிவின் கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரி கேணல் ஹேமந்த பெரேரா அவர்களினால் விருவுரை வழங்கியதுடன், கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு மாற்று உள்நாட்டுத் தொழிலாக தேனீ வளர்ப்பை மேற்கொள்ளும் வகையில் படையினருக்கு பயிற்சி அளித்தார்.

இந்த பயிற்சியின் போது தேனீ வளர்ப்பு தொடர்பான முறையான நுட்பங்கள் செயல் விளக்கங்கள் மூலம் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தில் பல சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.