Header

Sri Lanka Army

Defender of the Nation

04th September 2022 21:02:34 Hours

143 வது பிரிகேட் படையினரால் புத்தளத்தில் புதிய பாடசாலை கட்டிடம்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 143 வது பிரிகேட் படையினர் புத்தளம் மைலாங்குளம் ஆரம்பப் பாடசாலையில் நடனப் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களின் நலனுக்காக கொழும்பு மாவட்ட சபை 3220/21/22 நிதியுதவியுடன் மண்டபம் ஒன்றை நிர்மாணித்தனர். இக் கட்டிடத்திற்கான மனித வழ உதவியை 143 வது பிரிகேட் மற்றும் 16 வது கஜபா படையணியின் படையினர் வழங்கினர்.

இப் பாடசாலை மண்டபம் 20 அடி அகலமும் 40 அடி நீளமும் கொண்டது. இப்பாடசாலையின் நீண்டகாலத் தேவையை 143 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டீ எம் எப் கிச்சிலன் அடையாளம் காட்டினார். 14 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஜே.எம்.ஆர்.என்.கே ஜயமான்ன இந்த திட்டத்திற்கு ஆசி வழங்கினார்.

திறப்பு விழாவில் பிரதம அதிதியாக மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்கள் கலந்து கொண்டதுடன், இக்கட்டிடம் வெள்ளிக்கிழமை (2) பாடசாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

இராணுவத்தின் சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் மகா சங்க உருப்பினர்கள், மதகுருமார்கள், 141 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்.பி.ஜி கமகே, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேணல் பொதுப்பணி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.