Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd September 2022 21:12:36 Hours

படையினரின் ஒருங்கிணைப்பில் கேகாலையில் 300 உலர் உணவு பொதிகள் வழங்கல்

கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய, உந்துகொட, ஹெட்டிமுல்லை, கொட்டியாகும்புர, கலிகமுவ மற்றும் அரந்தர ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் தகுதியான 300 குடும்பங்களுக்கு தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளை, சசநராக்‌ஷக பால மண்டலய கேகாலை மற்றும் டான் ங்காக் புவே & கீ மெங் லாங் பவுண்டேஷன் லிமிடெட் (சிங்கப்பூர்) ஆகிய தொண்டு நிறுவனங்களின் அனுசரணையுடன் கேகாலை பிரதான தபால் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (31) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த்தொண்டு நிறுவனங்கள் கடந்த இரண்டு மாதங்களாக நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந் நிகழ்வு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டதுடன் 8 வது இலங்கை சிங்கப் படையணி படையினர் , 61 வது படைப்பிரிவின் 611 வது பிரிகேட் தளபதியின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் அந்தந்த அரச அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தகுதியான குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து நன்கொடையை வழங்கலை ஏற்பாடு செய்தனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களின் மேற்பார்வையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஒவ்வொரு உலர் உணவு பொதியும் ரூ.1500.00 மதிப்புடையதுடன் தகுதியான குடும்பங்களைத் தெரிவு செய்வது குறித்த கிராம சேவை உத்தியோகத்தர்களாலும் மாவட்ட செயலக அதிகாரிகளாலும் 611 வது பிரிகேட் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டது.

மதகுருமார்கள், மாவட்டச் செயலாளர் மற்றும் கேகாலை பிரதேச செயலாளர், கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், 611 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக உடோவிட்ட, பல சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் இத்திட்டத்தில் இணைந்திருந்தனர்.