Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd September 2022 19:28:19 Hours

ரய்கம்வத்தை கிராம சேவை பிரிவு பொதுமக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கல்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 58 வது படைப்பிரிவின் 582 வது பிரிகேடின் 1 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையினர் இங்கிரிய, ரய்கமவத்த கிராமசேவை பிரிவில் உள்ள கிராம வறிய மக்களுக்கு புதன்கிழமை (31) அன்று 78 உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.

58 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் விபுல இஹலகே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நனகொடையாளர் திரு சஞ்சய பீரிஸ் ரூபா 6000/= பெறுமதியான அந்த நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கு அனுசரணை வழங்கினார்.

ரய்கமவத்தை பிரதேசத்தில் 78 ஆதரவற்ற குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் இவர்கள் கிராம சேவை அதிகாரியுடன் கலந்தாலோசித்து பின்னர் தெரிவு செய்யப்பட்டனர். 1 வது இலங்கை இலேசாயுத காலாட்படையின் கட்டளை அதிகாரியான லெப்டினன் கேணல் யு.எல்.டி.கே பெரேரா இந் நிகழ்வினை மேற்பார்வையிட்டார்.