Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd September 2022 19:26:00 Hours

காலாட்படை பயிற்சி மையம் தனது 38 வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது

மின்னேரியாவில் அமைந்துள்ள காலாட்படை பயிற்சி மையம் ஓகஸ்ட் 25 ஆம் திகதி தனது 38 வது ஆண்டு நிறைவைக் காலாட்படை பயிற்சி மைய தளபதியின் வழிகாட்டுதலின்படி பல நிகழ்வுகளுடன் கொண்டாடியது.

இந் நாளின் முதல் நிகழ்வாக காலாட்படை பயிற்சி மைய தளபதி பிரிகேடியர் சந்தன ரணவீர படையினருடன் இணைந்து சோமாவதிய விகாரையில் நடைபெற்ற போதி பூஜ நிகழ்வில் கலந்து கொண்டு பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து மின்னேரிய விகாரையில் மற்றுமொரு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், காலாட்படை பயிற்சி மையத்தின் அனைத்துப் படையினருக்கும் ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து படையினர் மத்தியில் உரையாற்றிய தளபதி மைய வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நினைவாக நாட்டினார்.

தொடர்ந்து இந்த ஆண்டு நினைவு நாளன்று பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. பொலன்னறுவை வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களின் நலனுக்காக காலாட்படை பயிற்சி மையத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாயிகள் உட்பட 90 படையினர் தானாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.