Header

Sri Lanka Army

Defender of the Nation

31st August 2022 20:02:18 Hours

52 வது படைப்பிரிவின் 27 வது ஆண்டு நிறைவு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது படைப்பிரிவு தலைமையகம் புதன்கிழமை (24) தனது 27 வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. 52 வது படைப்பிரிவு வளாகத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்ட மத சம்பிரதாய நிகழ்வுகளும் ஆண்டுவிழாவின் போது நடைபெற்றது.

பின்னர், 52 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், 52 வது படைப் பிரிவினரை ஆசீர்வாதித்து அங்கு “போதி பூஜை” நிகழ்வும் இடம்பெற்றது.

அங்கு படையினர் மத்தியில் தளபதி ஆற்றிய சம்பிரதாயமான உரையில், படைப்பிரிவின் வரலாறு அதன் சாதனைகள் மற்றும் அப்பகுதியில் இதுவரை தொடங்கப்பட்ட சமூகம் சார்ந்த திட்டங்கள் ஆகியவற்றினை நினைவுபடுத்தினார். அனைத்து படையினருக்குமான மதிய நேர விருந்துபசாரத்தினை தொடர்ந்து இந்நிகழ்வு நிறைவு பெற்றது.