30th August 2022 18:15:53 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவின் கீழுள்ள 512 வது படைத் தலைமையகத்தின் 27 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நீர்கொழும்பு ஓரியண்ட் லயன்ஸ் கழகம் மற்றும் யாழ்பாண கேட்வே லயன்ஸ் கழகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் 512 வது பிரிகேட் படையினர், யாழ்ப்பாணம் மற்றும் கெய்ட்ஸ் பகுதியிலுள்ள பார்வை குறைபாடுள்ள 100 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடிகளை வழங்கினர். மேலும் அதே பகுதியில் உள்ள மாணவர்களுக்கு 50 ஜோடி பாடசாலை காலணிகள் திங்கட்கிழமை (22) வழங்கப்பட்டன.
யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள கண் வைத்திய பிரிவு 51 வது படைப்பிரிவு தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் அந்த இலவச கண்ணாடிகளுக்கு தகுதியானவர்களை பரிசோதித்ததுடன் இலவச காலணிகள் பெறுபவர்கள் அந்தந்த பாடசாலை அதிகாரிகள் மற்றும் கிராம சேவை அதிகாரிகளின் நெருக்கமான ஒத்துழைப்புடன் தெரிவு செய்யப்பட்டனர்.
யாழ். 512 வது பிரிகேடில் இடம்பெற்ற விநியோக நிகழ்வில் பிரதம அதிதியாக 51 வது படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் உதய குமார அவர்கள் லயன்ஸ் கழகப் பிரதிநிதிகளுடன் கலந்துகொண்டார். 512 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தனுஜா கோடவத்த தனது சிப்பாய்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை நெருக்கமாகக் கண்காணித்து ஒருங்கிணைத்தார்.