31st August 2022 09:45:25 Hours
31 ஆம் திகதி அதிகாலை மன்னார் வீதித்தடையில் வைத்து 54 வது படைப்பிரிவு மற்றும் 11 வது இலங்கை பீரங்கி படையணியின் புலனாய்வு துறையினரால் 10.4 கிலோ (ICE) ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 150 மில்லியன் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளினை தலைமன்னாரில் இருந்து வங்காலி பிரதேசத்திற்கு தங்களது சொந்த கெப் வாகனத்தில் எடுத்துச் செல்லும் போதே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும் குறித்த சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மன்னார் பொலிஸ் நிலையத்திடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.