Header

Sri Lanka Army

Defender of the Nation

29th August 2022 18:46:03 Hours

பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் உடல் பயிற்சி பாடசாலைக்கு விஜயம்

பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கபில டோலகே அவர்கள் புதன்கிழமை (24) பனாகொடவிலுள்ள இராணுவ உடற் பயிற்சிப் பாடசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். அங்கு இராணுவப் பௌதீகப் பயிற்சிப் பாடசாலையின் நிலையத் தளபதி கேணல் ருக்ஷான் கன்னங்கர அப்பாடசாலையின் முழுமையான பணிகள் தொடர்பான விளக்கத்தை பயிற்சி பணிப்பாளருக்கு வழங்கியதோடு பாடசாலையின் பயிற்சியின் செயல்பாட்டு அம்சங்கள் தொடர்பான மற்ற விடயங்களையும் அவர் விளக்கினார்.

உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பயிற்சிப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கபில டோலகே அவர்கள் நிலையத் தளபதி மற்றும் அனைத்து பதவி நிலை அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர், பனாகொடை முகாம் வளாகத்தினை பார்வையிட்டார்.