29th August 2022 12:33:12 Hours
இலங்கை நீர்வாழ் விளையாட்டு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய வோட்டர் போலோ சம்பியன்ஷிப் - 2022 சனிக்கிழமை (27) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நீச்சல் தட வளாகத்தில் ஆரம்பமானது.
ஆடவர் திறந்த அணி சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ அணி வெற்றி பெற்றதுடன் இறுதி தொடரில்: கடற்படை அணிக்கு 03 எதிரான இராணுவ அணி (14) என வெற்றி பெற்றது.
16 வது இலங்கை சிங்கப் படையணியின் சாதாரன சிப்பாய் ஆர்.டபிள்யூ.ஐ.எஸ் விமலசிறி சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார். (திறந்த பிரிவு) இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்கள் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினார்.