29th August 2022 15:50:04 Hours
கொழும்பு றோயல் கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் 270 க்கும் மேற்பட்ட படையினர், நாரஹேன்பிட்டி மத்திய இரத்த வங்கிக்கு வெள்ளிக்கிழமை (26) தாமாக முன்வந்து இரத்ததானம் செய்தனர்.
மேற்குப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் படையினர் உட்பட பல்வேறு படையணிகளின் படையினர், இந்த சமூகம் சார்ந்த நிகழ்வில் இரத்த தானம் செய்ய முன் வந்தனர்.
ரோயல் கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்கம் இந்த சமூகம் சார்ந்த பணிக்காக இராணுவத்திற்கு நன்றி தெரிவித்தது.